Loading...

அறிமுகம்

அறிமுகம்

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் ஓர் அறிமுகம்

வணக்கம்.!

6.10.1964 ல் துவக்கப்பட்ட நமது வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கடந்த 40 ஆண்டு காலமாக தொடர்ந்து சங்க உறுப்பினர்களின் நலனில் அக்கரை கொண்டு செயலாற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள். உறுப்பினர் நலன் காப்பது என்பது உறுப்பினர்களின் பணி பாதுகாப்பு, பணியிடம் ஏற்படுத்தி கொடுப்பது. பணி உயர்வுக்கு வழிவகை செய்வது. ஊதியமாற்றம், இன்னபிற பணபலன்களுக்குரிய சலுகைகளைப் பெற்று தருவது மட்டும் சங்கத்தின் நோக்கமல்ல. கருவறை முதல் கல்லறை வரை பொது மக்களின் அன்றாட பிரச்சனைகள் மற்றும் அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சேவை ஆற்றி வரும் நமது வருவாய்த்துறை சகோதரர்களின் பணி என்பது வெறும் ஒரு தொழிலாக இல்லாமல் சமூகப்பார்வையுடன் கூடிய சமுதாயப்பணியாக இருக்க வேண்டுமென்பதிலும் சங்கம் அக்கறை கொண்டுள்ளது.

கடந்த கால படிப்பினைகளை மனதில் தாங்கி எதிர்கால இயக்கங்களை வலுவுடனும், ஒற்றுமையுடனும், கொண்டு சென்றால் மட்டுமே நம்மை எதிர்த்து நிற்கும் உலகமய தனியார் மய தாராளமய சவால்களையும் ஆட்சியாளர்களின் அதிகாரிகளின் எதேஸ் சதிகார செயல்பாடுகளையும் த்டுத்து நிறுத்தி ஊழியர்களின் நலங்களை பாதுகாக்க முடியும் அந்த திசை வழியில் பயணிக்க சபதம் ஏற்போம் சங்கம் வலிமையுடன் பல்லாண்டு செயல்பட்டு உழியர் நலங்காக்க இணைந்து செயல்படுவோம்.

அன்றும் இன்றும் என்றும் பெற்ற உரிமைகளை சலுகைகளைப் பாதுகாத்திட பெற வேண்டியவைகளை வென்றெடுத்த நம் பேரியக்கத்தின் நடவடிக்கைகளில் தங்களின் பங்கு எதுவாக என்னவாக இருக்க வேண்டும்? இருக்கும் முடிவெடுங்கள் முனைப்புடன் செயலாற்றுங்கள்.

அரசு ஊழியர் வாழ்வில் சங்கம் என்பது எந்த நிலையிலும் எந்த கோணத்திலும் பிரிக்க முடியாதது என்ற வரலாற்று உண்மையினை மனதில் கொண்டு செயல்படுவோம் அனைவரையும் செயல்பட வைப்போம். வென்றெடுக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் பல உண்டு. மறுப்பதற்கில்லை ஆனால் போராடிப் போராடி வென்றெடுத்த உரிமைகளையே தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளிவிடும் புதிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும். இனிமேல் காலியாகப் போகும் பணியிடங்களில் புதிய நியமனம் இல்லை என் மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னேர் செல்லும் வழியில் பின்னேர் செல்ல முயற்சிக்கக் கூடும்.

நிகழ்கால வாழ்க்கையில் வேலை பளுவை சுமத்தி அலைக்கழிப்பதும், வயது முதிர்ந்த காலத்தில் கௌரவத்துடன் சமூகத்தில் நடமாடுவதை கேள்விக்குறியாக்குவதும் புதிய பொருளாதாரத்தின் கோள்கைகள் இவைகள் எதிர்த்து நிற்க மோசடித்தனமான அரசியல் - பொருளாதார கொள்கைகளைப் புரிந்து களம் காண வேண்டும்.

"உண்மை உழைப்பு, உயர்வு" - என்னும் தராக மந்திரத்தை உயர்த்தி பிடிப்போம்
"தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்"
"சங்கத்தில் சங்கமிப்போம்"
"சாதனைகள் பல செய்வோம்"
"சரித்திரங்கள் படைத்திடுவோம்" வாரீர்! வாரீர்!